Wednesday, 1 June 2011
{சூர்யா காலில் விழும் ஆர்யா, விஷால்} சிவாஜி, எம்ஜிஆர் காலத்திலிருந்தே இரு தரப்பு ரசிகர்களும் ஈகோவால் முட்டிக்கொள்கிற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் நண்பர்களாகவே இருப்பார்கள்.
ரஜினி - கமல், அஜீத் - விஜய், விக்ரம் - சூர்யா, தனுஷ் - சிம்பு என்று தொடர்கிறது அந்த மோதலும் ஈகோவும். படங்களில் காட்சி வைக்கிற போதே இவர்களுக்காகவும் தனித்தனியாக யோசித்து வசனம் எழுதி கைதட்டல் வாங்கும் இயக்குனர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் பாலா யதார்த்தவாதியாச்சே, நடிகர்களுக்காக வளையாத பேனா அவருடையது. அதற்கு பெரிய உதாரணம் "அவன் இவன்" படத்தில் வரும் ஒரு காட்சி தான். இப்படத்தில் சூர்யா முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இன்றைய தேதியில் அவருக்கு பெரியளவுக்கு பிசினஸ் வேல்யூ இருந்தாலும், ஆர்யா, விஷால் வயதோடும் மதிப்போடும் ஒப்பிட்டால் சென்ட்டி மீற்றர் அளவுக்கே அவர் உயரம்.
படத்தில் வரும் அந்த காட்சியில் ஆர்யாவும், விஷாலும் சூர்யா காலில் விழுவார்களாம். இந்த காட்சிக்கு ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படியிருக்குமோ என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment