Friday 23 September 2011

சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'ஏழாம் அறிவு


சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'ஏழாம் அறிவு'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (செப் 22) நடைபெற்றது. அவ்விழாவில் தனுஷ், கார்த்தி, தயாநிதி அழகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.இசை வெளியீட்டு விழாவிலிருந்து சில தகவல் துளிகள் :

* சீன இசைக்கு ருக்மணி ஆட நிகழ்ச்சி ஆரம்பமானது.

* நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஜெய், அங்கு வந்திருந்த சூர்யாவின் ரசிகர்களின் மத்தியில் இந்த படத்தினை பற்றிய அவர்களின் கருத்துகளை கேட்டு அறிந்தார்.

* முதலில் மேடையேறிய உதயநிதி ஸ்டாலின் " படக்குழுவினர் கேட்கும் போது எல்லாம் பணம் கொடுத்து இருக்கிறேன். இந்த மாதிரி ஒரு படத்திற்கு என்னை தயாரிப்பாளர் ஆக்கியதற்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், சூர்யா, ஹாரிஸ் ஜெயராஜ், ரவி கே.சந்திரன் உள்ளிட்டோருக்கு இந்த சமயத்தில் நன்றி சொல்ல வேண்டும் " என்றார்.

* ஏ.ஆர்.முருகதாஸ் மேடை ஏறுவதற்கு முன்பு அவர் கடந்து வந்த பாதை பற்றிய ஒரு வீடியோ ஒன்றை திரையிட்டு விட்டு அவரை அழைத்தார்கள்.

* ஏ.ஆர்.முருகதாஸ் பேசும்போது " இது மாதிரி ஒரு படம் இன்னும் ஒரு 5 வருடங்களுக்கு சூர்யாவும் செய்ய முடியாது. என்னாலும் செய்ய முடியாது. இந்த படம் உருவாக காரணமாக இருந்த உதயநிதி சாருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். படத்தில் முதல் 15 நிமிடங்களுக்கு வரும் காட்சிகளுக்கு ஒரு நிமடத்திற்கு 1 கோடி செலவு செய்து இருக்கிறோம் " என்று கூறினார்.

* ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த படங்களின் பாடல்களுக்கு லட்சுமிராய் நடனமாடினார். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஜெய் " இப்போது உங்கள் முன்னால் ஆட போவது ஐஸ்வர்யா ராய்.... அப்படினு சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா அவங்க கர்ப்பமா இருக்கிறதால, இப்போ கர்ப்பம் ஆகாத லட்சுமிராய் உங்கள் முன்னால் ஆடுவார்கள் " என்று கூறி அனைவரையும் கலகலப்பாக்கினார்.

* தனது அண்ணன் சூர்யாவின் உழைப்பை பற்றி கார்த்தி பேசியது : " ஏழாம் அறிவு படம் கண்டிப்பாக 'கஜினி' படத்தை விட பெரிய அளவு வெற்றி பெறும். இந்த படத்திற்காக அண்ணனின் உழைப்பு சாதாரணமானது அல்ல. ஒரு சர்க்கஸ் கலைஞனாக நடித்தார். அதற்காக அவர் சர்க்கஸ் கலை கற்க கொடுத்த உழைப்பு என்னை பிரமிக்க வைத்தது. "

* சூர்யா பேசியது : " ஏ.ஆர்.முருகதாஸ் சார் என்னிடம் முதலில் 3 கதைகள் சொன்னார். பிறகு, "சார் இந்த கதை எல்லாம் வேண்டாம் சார். எந்த அளவு உச்சிக்கு போய் ஒரு படம் பண்ண முடியுமோ அந்த மாதிரி ஒரு படம் பண்ணுவோம் சார். அதற்கு அப்புறம் நீங்களும் அந்த மாதிரி ஒரு படம் செய்வதற்கு கொஞ்சம் வருடம் ஆகணும் சார்" அப்படினு இந்த கதையை சொன்னார். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த போதிதர்மா அப்படினு ஒருத்தருக்கு சீனாவில் கோவில் இருக்கிறது. அவர் வேடத்தில் நடித்து இருக்கிறேன். அந்த பாத்திரத்திற்கு கொஞ்சம் JUSTICE பண்ணி இருக்கேன் நினைக்கிறேன் " என்று கூறினார்.

* படத்தில் வில்லனாக நடித்த JOHNNY TRI NGUYEN என்பவரை அழைக்கும் முன்னர் அவரை பற்றி வீடியோ ஒன்றை திரையிட்டார்கள். ஆங்கிலத்தில் வெளிவந்த SPIDERMAN, X MEN, THE REBEL உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இவர். இந்த படத்தில் வில்லன் வேடத்தினை ஏற்று இருக்கிறார். என்ற அறிவுப்பு வந்தபோது கூட்டத்தில் அவ்வளவு ஆரவாரம்.

* JOHNNY TRI NGUYEN பேசும் போது " இந்த படத்தில் நடித்து இருப்பதை பெருமையாக கருதுகிறேன். சூர்யா ஒரு அற்புதமான நடிகர். அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தார் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். இறுதி சண்டை காட்சியில் அவரது உழைப்பு என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டது " என்று கூறினார்.

*JOHNNY TRI NGUYEN பேசிக் கொண்டு இருக்கும் போதே மேடை ஏறிய சூர்யா " கண்டிப்பாக JOHNNY TRI NGUYEN நான் நன்றி சொல்ல வேண்டும். படப்பிடிப்பு முடிந்தவுடன் என்னுடன் இருந்து சுமார் 3 மணி நேரம் எனக்கு சொல்லி கொடுப்பார். நான் பயிற்சி எடுக்கும் போது இவர் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இவருக்கு இணையாக இந்த படத்தில் வரும் POSES எல்லாம் இருக்க வேண்டும். அதற்கு நான் முயற்சி செய்து இருக்கிறேன். படத்தில் நாங்கள் இருவரும் மோதும் இறுதி சண்டைக்காட்சி படம் பார்க்கும் அனைவரையும் வியக்க வைக்கும் " என்று தெரிவித்தார்.

* நாயகி ஸ்ருதிஹாசன் பேசும்போது "எனக்கு தமிழில் வரும் முதல் படம் 'ஏழாம் அறிவு'. எனது முதல் படமே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், சூர்யாவிற்கு நாயகி என அனைத்தும் அமைந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும் " என்று தெரிவித்தார். உடனே ஜெய் " உங்களுக்கு ஒரு SURPRISE" என்று கூறிவிட்டு, கமல்ஹாசன் பேசிய ஒரு ஆடியோ பதிவு ஒன்றை ஒலிபரப்பினார்கள். அதில் கமல் படக்குழுவையும் ஸ்ருதியையும் பாராட்டி இருந்தார்.

* படத்தின் டிரெய்லரை வெளியிட்டு பேசிய தனுஷ் " படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. டிரெய்லரை பார்த்தவுடன் எப்படா இந்த படம் ரீலிஸ் என்று என்னை யோசிக்க வைத்து விட்டது. தீபாவளி எப்படா வரும் என்று எதிர்நோக்கி இருக்கிறேன் " என்று கூறினார்.

* 'WHO IS BODHIDHARMAN?' என்று ஆரம்பிக்கும் அந்த டிரெய்லரை பார்க்கும் போது அவ்வளவும் பிரம்மாண்டம். டிரெய்லரில் சூர்யாவின் நடிப்பும், JOHNNY TRI NGUYENவின் வில்லத்தனமான பார்வையும் அனைவரையும் கொள்ளை கொண்டது.

* இறுதியில் படக்குழுவினர் மற்றும் நடிகர் நடிகைகள் அனைவரும் இணைந்து இசையை வெளியிட்டார்கள்.

No comments:

Post a Comment